மஹாலக்ஷ்மி 108 போற்றி – தமிழ் பாடல்வரிகள் | Mahalakshmi 108 Potri in Tamil with Lyrics | Anush Audio



Song : Mahalakshmi 108 Potri – Tamil Lyrical Video
Singer : Amrutha
Lyrics : Senkathirvanan
Music : Pradeep
Production : Anush Audio
#mahalakshmisong#lakshmi108potri#anushaudio

பாடல் : மஹாலக்ஷ்மி 108 போற்றி – தமிழ் பாடல் வரிகள்
குரலிசை : அம்ருதா
கவியாக்கம் : செங்கதிர்வாணன்
இசை : பிரதீப்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ

பாடல் வரிகள் :

ஓம் பொன்மேனி உடையவளே போற்றி
ஓம் புன்னகை புரிபவளே போற்றி
ஓம் தங்க காசு மாலை அணிந்தவளே போற்றி
ஓம் தரித்திரம் அகற்றுபவளே போற்றி
ஓம் சந்திரனுக்கு ஒப்பானவளே போற்றி
ஓம் செல்வந்தன் ஆக்குபவளே போற்றி
ஓம் மந்தகாச முகமுடையாளே போற்றி
ஓம் ஒளிமயமாய் பிரகாசிப்பவளே போற்றி
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே போற்றி போற்றி

ஓம் எல்லாம் உடையவளே போற்றி
ஓம் இல்லையென சொல்லாதவளே போற்றி
ஓம் நிறைவுதனைக் கொண்டவளே போற்றி
ஓம் அடியவர்க்கு அருள்பவளே போற்றி
ஓம் தாமரையில் அமர்ந்தவளே போற்றி
ஓம் தயாள குணம் உடையாளே போற்றி
ஓம் தேவர்குலம் தொழுவாரே போற்றி
ஓம் தேவைகளைத் தீர்ப்பவளே போற்றி
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே போற்றி போற்றி

ஓம் சூரியனாய் ஒளிர்பவளே போற்றி
ஓம் சூட்சுமத்தை அறிந்தவளே போற்றி
ஓம் தவமிருந்த தயாபரியே போற்றி
ஓம் வில்வமரம் தோற்றுவித்தாய் போற்றி
ஓம் குபேரனுக்கு அதிபதியே போற்றி
ஓம் குன்றாத தனமுடையாய் போற்றி
ஓம் கோமியத்தில் இருப்பவளே போற்றி
ஓம் கோபத்தை வெறுப்பவளே போற்றி
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே போற்றி போற்றி

ஓம் நறுமணமாய் வருபவளே போற்றி
ஓம் நலன் யாவும் தருபவளே போற்றி
ஓம் தேவதைகளுக்கு மேலானவளே போற்றி
ஓம் திருவருள் தருபவளே போற்றி
ஓம் ஆசைகளை நிறைவேற்றுவாய் போற்றி
ஓம் வாக்குக்கு வலுவூட்டுவாய் போற்றி
ஓம் உணவினிலே ருசியானாய் போற்றி
ஓம் ஊழ்வினை விரட்டிடுவாய் போற்றி
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே போற்றி போற்றி

ஓம் கர்த்தமர் அன்னையே போற்றி
ஓம் கருணை காட்டுவாய் போற்றி
ஓம் சிக்லீதர் தாயே போற்றி
ஓம் செல்வ மழை பொழிபவளே போற்றி
ஓம் பிரம்புதனை உடையவளே போற்றி
ஓம் பிணி நீங்கச் செய்பவளே போற்றி
ஓம் செங்கோல் செலுத்துபவளே போற்றி
ஓம் செல்வாக்கு தருபவளே போற்றி
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே போற்றி போற்றி

ஓம் வசதி பல தருபவளே போற்றி
ஓம் வளமோடு வாழவைப்பாய் போற்றி
ஓம் மல்லிகையால் மகிழ்பவளே போற்றி
ஓம் மனக்குறை நீக்குவாய் போற்றி
ஓம் சந்தன முல்லை சாற்றினோம் போற்றி
ஓம் சம்பத்து அருளுவாய் போற்றி
ஓம் சம்பங்கி ஏற்பவளே போற்றி
ஓம் சங்கடம் போக்குவாய் போற்றி
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே போற்றி போற்றி

ஓம் துளசி தேவியே போற்றி
ஓம் துயரம் போக்குவாய் போற்றி
ஓம் கிருஷ்ண துளசியே போற்றி
ஓம் கீர்த்தி தருவாய் போற்றி
ஓம் ஸ்ரீ தேவி வடிவமே போற்றி
ஓம் தீமைகள் அளிப்பவளே போற்றி
ஓம் பூதேவியே போற்றி
ஓம் பொறுமைக்கு இலக்கணமே போற்றி
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே போற்றி போற்றி

ஓம் சஞ்சலாதேவியே போற்றி
ஓம் சரணடைந்தோமே போற்றி
ஓம் அசலா தேவியே போற்றி
ஓம் அசையா வடிவமே போற்றி
ஓம் நெல்லியில் உறைபவளே போற்றி
ஓம் நினைத்ததை முடிப்பாய் போற்றி
ஓம் கல்யாண வாழ்வு தருபவளே போற்றி
ஓம் கை தொழுதோம் உன்னையே போற்றி
ஓம் ஐஸ்வர்யா லக்ஷ்மியே போற்றி போற்றி

ஓம் குழந்தை வரம் தருவாய் போற்றி
ஓம் குலம் தழைக்க வைப்பாய் போற்றி
ஓம் காலை ஞானம் தருவாய் போற்றி
ஓம் சௌபாக்கியம் அளிப்பவளே போற்றி
ஓம் வயல் செழிக்க வைப்பவளே போற்றி
ஓம் வறுமையினை தடுப்பவளே போற்றி
ஓம் உழவுதனை காப்பவளே போற்றி
ஓம் உணவளிக்கும் உத்தமியே போற்றி
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே போற்றி போற்றி

ஓம் ராஜயோகம் தருபளே போற்றி
ஓம் ராஜியத்தை அளிப்பவளே போற்றி
ஓம் செயல்திறன் வழங்கிடுவாய் போற்றி
ஓம் செருக்குதனை அழித்திடுவாய் போற்றி
ஓம் உடலுறுதி தந்திடுவாய் போற்றி
ஓம் உழைப்போரை உயர்த்திடுவாய் போற்றி
ஓம் மன உறுதி அளிப்பவளே போற்றி
ஓம் மனக் கவலை மாற்றிடுவாய் போற்றி
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே போற்றி போற்றி

ஓம் ஆவணி அஷ்டமியில் வணங்குவோம் போற்றி
ஓம் ஆனந்த வாழ்வளிப்பாய் போற்றி
ஓம் திருமகள் அந்தாதி பாடுவோம் போற்றி
ஓம் திருவடி பணிவோம் போற்றி
ஓம் சகல சித்தி அளிப்பவளே போற்றி
ஓம் சஞ்சலம் நீக்குவாய் போற்றி
ஓம் நிகரில்லா அழகுடையாளே போற்றி
ஓம் நின்னை சரணடைந்தோம் போற்றி
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே போற்றி போற்றி

ஓம் விஷ்ணுபரிவார தேவியரே போற்றி
ஓம் சரஸ்வதி தேவியே போற்றி
ஓம் பரிதி தேவியே போற்றி
ஓம் கீர்த்தி தேவியே போற்றி
ஓம் சாந்தி தேவியே போற்றி
ஓம் துஷ்டி தேவியே போற்றி
ஓம் புஷ்டி தேவியே போற்றி
ஓம் பத்மபுராண மகிமையே போற்றி
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே போற்றி போற்றி

Check Out our Other Channel ‘Anush Music’ –

In Association with Divo

source

25 Comments

  1. ஆரோக்கியம் நிறை பொருளாதாரம் நிம்மதியான வாழ்க்கை தந்தருள் தாயே போற்றி…..

  2. தீமைகளை அளிப்பாய என்று போட்டு இருக்கே.. தயவு செய்து மாற்றவும்

  3. தாயே எனக்கு இரண்டு லட்சம் கடன் அடையனும் தாயே.சொந்த இடம் வாங்கி வீடு கட்டி கொடுங்க தாயே.எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் தாயே.ஓம் மகாலெட்சமியே போற்றி போற்றி.

  4. ஆத்தா துர்க்கா தேவியே மஞ்சு பாப்பாக்கு ஒருவீடு வாங்கி கொடுங்கள் பகவான் அருளாசி யுடன் இந்த காரியத்தை செய்து கொடுக்கனும் ஆத்தா ஈஸ்வரிவயே

  5. என் மகள் அவள் கணவனுடன் சேர்ந்து வாழ்வும் குழந்தை பாக்கியமுமு கிடைக்க அருள் புரிவாய் தாயே

  6. ஓம் கலை ஞானம் என்பதற்கு பதிலாக காலை ஞானம் என்று உள்ளது

  7. எங்களுக்கு எல்லா கஷ்டங்கள், கடன்கள் தீர்த்து , சொந்த வீடு கட்ட அருள் புரிய வேண்டும்;
    ஓம் மகாலட்சுமியே போற்றி

  8. தாயே மகாலட்சுமி தாயே எங்கள் வாழ்வில் ஒற்றுமையும் செல்வ செழிப்பையும் மன நிம்மதியையும் மன தைரியத்தையும் தந்தருள்வாய் தாயே நோய் நொடி இல்லாமல் வாழவும் நீண்ட ஆயுளை தந்து தீர்க்க ஆயுளாய் வாழ எங்களை ஆசீர்வதி தருவாய் தாயே

  9. ஓம் மகாலட்சுமி அம்மன் என் பிள்ளைகள் இழந்ததை மீட்டுத்தர அபினஜன் அனுஜன் வறுமை ஒழியம்மா அனுஜனுக்கு டிகிரி கிடைக்க கருணையும் சித்திசெய்யப்பா அவர்களை நீயாக வழிமுறைகள் காட்டப்பா அனுஜன் அபினஜன் கொடிய நோயை அழிச்சு வேலை கிடைக்க செய்யம்மா அபினஜன் கல்வி சீர்ப்படுத்தி சித்திசெய்யபம்மா

  10. ஓம் சக்தி மகாலக்ஷ்மி போற்றி அம்மா எனக்கு ஒரு நல்ல வீடு ஒன்னு கொடுத்துடும்மா தாயே

Comments are closed.

© 2024 Lyrics MB - WordPress Theme by WPEnjoy