பிரதோஷ சிவ கவசம் – பாடல்வரிகள் | Pradosha Siva Kavasam with Lyrics | Sivan Song Tamil | Anush Audio



Song : Pradosha Siva Kavasam – Lyrical Video
Singer : Sudha
Lyrics : Senkathirvanan
Music : Pradeep
Production : Anush Audio
#sivansong#pradoshamspecial#AnushAudio

பாடல் : பிரதோஷ சிவ கவசம் – பாடல்வரிகள்
குரலிசை : சுதா
கவியாக்கம் : செங்கதிர்வாணன்
இசை : பிரதீப்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ

Check Out our Other Channel ‘Anush Music’ –

In Association with Divo

source

22 Comments

  1. சக்தியின் துணைவா எங்களின் இறைவா

    பக்தருக்கருளும் பனிமலை நாதா

    வேதம் நான்கும் உன் புகழ் பேசும்

    ஆடல் அரசே அம்பலவாணா (2) 4

    மெய்யுடன் பிறந்த வாசனை போலே

    மெய்யடியாரின் மனம் உறைவானே

    ஹரஹர சிவனே அருணாசலனே

    அருள் புரிவதிலே பரிபூரணனே 8

    சந்திரன் தலையில் சூடிய வடிவே

    சங்கரனாக விளங்கிடும் உருவே

    வந்தவர்கெல்லாம் வரம் தரும் சிவனே

    வஞ்சனையில்லா நெஞ்சடையோனே 12

    சூலம் தரித்த சூத்திரதாரி

    பரிவுடன் பார்க்கும் பரோபகாரி

    காலம் தன்னை கைக்குள் வைத்து

    காரியம் நடத்தும் சர்வேஸ்வரனே 16

    1

    கருணாமூர்த்தி வருக வருக

    கவலை தீர்க்கும் மருந்தே வருக

    அருணாசலனே வருக வருக

    அடியவர் மகிழ அருளே தருக (2) 20

    பரம சிவனே பரிவுடன் வருக

    பரம் பொருள்நீயே வருக வருக

    சிரமம் நீக்கும் சிவமே வருக

    சிந்தை முழுதும் நிறைந்திட வருக 24

    மருந்தீஸ்வரனே மகிழ்ந்தே வருக

    மாதொரு பாகன் வடிவே வருக

    குறுங்கலீஸ்வரன் விரைந்தே வருக

    குறைகளை விலக்க அருள்மழை பொழிக 28

    அலையும் மனதை அடக்கிட வருக

    அன்பே சிவமென அறிந்தேன் வருக

    நலம் தரும் எங்கள் நாயகன் வருக

    நமசிவாயமே நலமுடன் வருக 32

    ஏழுலகும் உன் புகழ்தனை பாடும்

    சூழும் இருளை உனதருள் நீக்கும்

    விண்ணவர் கைகள் உந்தனை வணங்கும்

    புண்ணியம் உனது திருவடி வழஙகும் (2) 36

    நீராடி நெற்றியில் திருநீறணிந்து

    நீலகண்டேனே உந்தனைத் துதித்து

    எல்லாம் நீ எனும் சிந்தனைக் கொடுத்து

    எங்களை நீயே நல்வழி நடத்து 40

    அப்பரின் கவியில் அகம் மகிழ்ந்தவனே

    சுப்பரமணியனை வழங்கிய சிவனே

    கடுந்தவம் புரிந்திட வரம் தருபவனே

    கயிலாபுரியின் அதிபதி சிவனே 44

    2

    விரிசடையோனே விந்தை ஸ்வரூபா

    உருகிட அழைத்தால் உடன் வருவோனே

    திருவிளையாடல் புரிபவன் நீயே

    தீமையை அழிக்கும் முதல்வனும் நீயே 48

    தகதகதகவென பொன்னொளி காட்டும்

    தாண்டவராயன் உந்தனின் தோற்றம்

    இகபர சுகங்கள் குறைவற வழங்கு

    எல்லா உயிர்களும் உனதென முழங்கு 52

    முகம் அது மலர முறுவலை காட்டு

    அகம் அது குளிர அருட்கரம் நீட்டு

    துயரது விலக விதியனை மாற்று

    அடியவர் காட்டும் அன்பினை ஏற்று 56

    அன்பினைக் காட்டும் அருட்பெரும் ஜோதி

    அம்பிகை உமையுடன் நீயொரு பாதி

    நல்லவர் வாழ அருளிடு நீதி

    நமசிவாயமே நலம் தரும் சேதி (2) 60

    உந்தனின் தோழன் லக்ஷ்மி குபேரன்

    திருவருள் தன்னை நாஙகளும் அடைய

    தந்திட வேண்டும் நல்லருள் நீயே

    சந்திரசேகரா எங்களின் சிவனே 64

    அடியவர் வாழ்வில் அமைதியைத் தந்து

    அவதிகள் நீங்கி விலகிடச் செய்து

    தடைகளை அகற்றி வழியினைக் காட்டு

    நலிவடைந்தோரின் நெஞ்சினைத் தேற்று 68

    காசியில் வாழும் கங்காதரனே

    கலியினைத் தீர்க்கும் காமேஸ்வரனே

    பூஜைகள் செய்து உன்னடி போற்றி

    பொல்லா வினையைப் போககிடுவோமே 72

    3

    எண்ணம் முழுதும் இருப்பவன் நீயே

    எல்லா உயிரின் இயக்கம் நீயே

    கண்கள் மூன்றைக் கொண்டவன் நீயே

    கைதொழுவோரை காத்திடுவாயே (2) 76

  2. நற்றாள் வணங்கிட நல்லோர் வியந்திட

    பற்றாய் உனையே பறறிடுவோமே

    சற்றே கருணை புரிந்திடுவாயே

    தியான வடிவாய் தவம் புரிபவனே

    திருவடி பணிவோர்க் கருளும் சிவனே

    யோக நிலையில் புவியினை ஆளும்

    தியாகேஸ்வரனே நீயருள்வாயே

    மனமொரு முகமாய் மலரடி தன்னில்

    அனுதினம் லயித்து இரண்டற கலந்து

    சிவமயமாக ஒளியது தோன்றி

    அடியவர் நெஞ்சை ஆள்வது நீயே

    ஈசன் உனையே பேசுதல் வேண்டும்

    லிங்காபிஷேகம் கானுதல் வேண்டும்

    நேசம் மிகுந்து உருகுதல் வேண்டும்

    நிதமும் உந்தன் திருவருள் வேண்டும்

    சக்தி மூவரை பக்தியில் வணங்க

    ஒன்பது நாட்கள் அவனியில் வேண்டும்

    முக்தியை கொடுக்கும் நின்னருள் பெறவே

    ஒருநாள் போதும் பலன் உண்டாகும்

    சிவஓம் சிவஓம் எனும் உன் நாமம்

    செவிகளில் ஒலிக்க சிறப்புகள் கூடும்

    வருவோம் வருவோம் சன்னதி நாடி

    வைத்தீஸ்வரன் உனதருள் வேண்டி

  3. அணையே இல்லா அருட்கடல் நீயே

    அகிலம் காக்கும் ஆண்டவன் நீயே

    இணையே இல்லா ஈசனும் நீயே

    எளியோர்கருளும் எம்பெருமானே

    புழுவும் புல்லும் உன்படைப்பாகும்

    புலரும் பொழுதும் உன் பரிசாகும்

    எழுதும் கவியும் இசையும் உன்னை

    என்றும் போற்றி வழங்கிடும் தன்னை

    மொட்டும் மலரும் உன்பதம் நாடி

    முன்வினை நீங்கி மோட்சம் பெறுமே

    தொட்டவை யாவும் துலங்கிடத்தானே

    தூயவன் உன்னை வணங்கிடுவோமே

    ஆணவம் கன்மம் மாயை என்னும்

    மும்மலம் தன்னை அழிப்பவன் நீயே

    ஞான விலாசமாய் நல்லொளி வடிவாய்

    ஞானியர் அறிந்த சர்வேஸ்வரனே

    சிவராத்திரியெனும் சொல்லின் பொருளே

    மங்கள சுகத்தை தருவது ஆகும்

    தவம் பல இயற்றி பெறுகிற வரத்தை

    தருகிற நாளே இந்நாளாகும்

    எண்ணம் முழுதும் இருப்பவன் நீயே

    எல்லா உயிரின் இயக்கம் நீயே

    கண்கள் மூன்றைக் கொண்டவன் நீயே

    கைதொழுவோரை காத்திடுவாயே (2)

    அணையே இல்லா அருட்கடல் நீயே

    அகிலம் காக்கும் ஆண்டவன் நீயே

    இணையே இல்லா ஈசனும் நீயே

    எளியோர்கருளும் எம்பெருமானே

    புழுவும் புல்லும் உன்படைப்பாகும்

    புலரும் பொழுதும் உன் பரிசாகும்

    எழுதும் கவியும் இசையும் உன்னை

    என்றும் போற்றி வழங்கிடும் தன்னை

    மொட்டும் மலரும் உன்பதம் நாடி

    முன்வினை நீங்கி மோட்சம் பெறுமே

    தொட்டவை யாவும் துலங்கிடத்தானே

    தூயவன் உன்னை வணங்கிடுவோமே

    ஆணவம் கன்மம் மாயை என்னும்

    மும்மலம் தன்னை அழிப்பவன் நீயே

    ஞான விலாசமாய் நல்லொளி வடிவாய்

    ஞானியர் அறிந்த சர்வேஸ்வரனே

    சிவராத்திரியெனும் சொல்லின் பொருளே

    மங்கள சுகத்தை தருவது ஆகும்

    தவம் பல இயற்றி பெறுகிற வரத்தை

    தருகிற நாளே இந்நாளாகும்

    மனமும் வாக்கும் காயம் மூன்றும்

    உனையே நினைத்திட தீவினை அகலும்

    தினமும் உந்தன் திருவடி வணங்க

    தொடரும் துயரம் நிழலென மறையும்

    உறக்கம் விடுத்து விரதம் இருந்து

    உலக நாயகன் உந்தனை பணிந்து

    சிறப்புடன் வாழ உன்னருள் வேண்டி

    செய்திடுவோமே பூஜைகள் கோடி

    பார்க்க பார்க்க உன்முகம் பார்க்க

    பூக்க பூக்க மலரெனப் பூக்க

    நல்லருள் வேண்டும் நீ தருவாயே

    நம்பிய பேருக்கு நலம்புரி நீயே

    எல்லா உயிரும் உந்தன் படைப்பு

    உலகின் இயக்கம் உந்தனின் சிறப்பு

    இல்லாதொழிப்பாய் இனியொரு பிறப்பு

    ஒவ்வொரு நொடியும் உந்தனின் நினைப்பு

    வெள்ளியம்பல வித்தகன் நீயே

    விதியினை மாற்றும் வல்லவன் நீயே

    சொல்லில் அடங்கா சொக்கனும் நீயே

    சுந்தர தமிழில் உனைப்பணிவோமே

  4. நீராடி நெற்றியில் திருநீறணிந்து

    நீலகண்டேனே உந்தனைத் துதித்து

    எல்லாம் நீ எனும் சிந்தனைக் கொடுத்து

    எங்களை நீயே நல்வழி நடத்து

    அப்பரின் கவியில் அகம் மகிழ்ந்தவனே

    சுப்பரமணியனை வழங்கிய சிவனே

    கடுந்தவம் புரிந்திட வரம் தருபவனே

    கயிலாபுரியின் அதிபதி சிவனே

    விரிசடையோனே விந்தை ஸ்வரூபா

    உருகிட அழைத்தால் உடன் வருவோனே

    திருவிளையாடல் புரிபவன் நீயே

    தீமையை அழிக்கும் முதல்வனும் நீயே

    தகதகதகவென பொன்னொளி காட்டும்

    தாண்டவராயன் உந்தனின் தோற்றம்

    இகபர சுகங்கள் குறைவற வழங்கு

    எல்லா உயிர்களும் உனதென முழங்கு

    முகம் அது மலர முறுவலை காட்டு

    அகம் அது குளிர அருட்கரம் நீட்டு

    துயரது விலக விதியனை மாற்று

    அடியவர் காட்டும் அன்பினை ஏற்று

    அன்பினைக் காட்டும் அருட்பெரும் ஜோதி

    அம்பிகை உமையுடன் நீயொரு பாதி

    நல்லவர் வாழ அருளிடு நீதி

    நமசிவாயமே நலம் தரும் சேதி (2)

    உந்தனின் தோழன் லக்ஷ்மி குபேரன்

    திருவருள் தன்னை நாஙகளும் அடைய

    தந்திட வேண்டும் நல்லருள் நீயே

    சந்திரசேகரா எங்களின் சிவனே

    அடியவர் வாழ்வில் அமைதியைத் தந்து

    அவதிகள் நீங்கி விலகிடச் செய்து

    தடைகளை அகற்றி வழியினைக் காட்டு

    நலிவடைந்தோரின் நெஞ்சினைத் தேற்று

    காசியில் வாழும் கங்காதரனே

    கலியினைத் தீர்க்கும் காமேஸ்வரனே

    பூஜைகள் செய்து உன்னடி போற்றி

    பொல்லா வினையைப் போககிடுவோமே

    எண்ணம் முழுதும் இருப்பவன் நீயே

    எல்லா உயிரின் இயக்கம் நீயே

    கண்கள் மூன்றைக் கொண்டவன் நீயே

    கைதொழுவோரை காத்திடுவாயே (2)

  5. சக்தியின் துணைவா எங்களின் இறைவா

    பக்தருக்கருளும் பனிமலை நாதா

    வேதம் நான்கும் உன் புகழ் பேசும்

    ஆடல் அரசே அம்பலவாணா (2)

    மெய்யுடன் பிறந்த வாசனை போலே

    மெய்யடியாரின் மனம் உறைவானே

    ஹரஹர சிவனே அருணாசலனே

    அருள் புரிவதிலே பரிபூரணனே

    சந்திரன் தலையில் சூடிய வடிவே

    சங்கரனாக விளங்கிடும் உருவே

    வந்தவர்கெல்லாம் வரம் தரும் சிவனே

    வஞ்சனையில்லா நெஞ்சடையோனே

    சூலம் தரித்த சூத்திரதாரி

    பரிவுடன் பார்க்கும் பரோபகாரி

    காலம் தன்னை கைக்குள் வைத்து

    காரியம் நடத்தும் சர்வேஸ்வரனே

    கருணாமூர்த்தி வருக வருக

    கவலை தீர்க்கும் மருந்தே வருக

    அருணாசலனே வருக வருக

    அடியவர் மகிழ அருளே தருக (2)

    பரம சிவனே பரிவுடன் வருக

    பரம் பொருள்நீயே வருக வருக

    சிரமம் நீக்கும் சிவமே வருக

    சிந்தை முழுதும் நிறைந்திட வருக

    மருந்தீஸ்வரனே மகிழ்ந்தே வருக

    மாதொரு பாகன் வடிவே வருக

    குறுங்கலீஸ்வரன் விரைந்தே வருக

    குறைகளை விலக்க அருள்மழை பொழிக

    அலையும் மனதை அடக்கிட வருக

    அன்பே சிவமென அறிந்தேன் வருக

    நலம் தரும் எங்கள் நாயகன் வருக

    நமசிவாயமே நலமுடன் வருக

    ஏழுலகும் உன் புகழ்தனை பாடும்

    சூழும் இருளை உனதருள் நீக்கும்

    விண்ணவர் கைகள் உந்தனை வணங்கும்

    புண்ணியம் உனது திருவடி வழஙகும் (2)

  6. முழுப்பாடலும் பதிவு செய்து உள்ளேன். கீழிருந்து மேழாக வரவும்

    ஒம் நமசிவாய

  7. அன்னம் கொண்டு அபிஷேகம் செய்ய

    வயிற்றுத் தொல்லை வாராதிருக்கும்

    அரிசி மாவு கொண்டு அபிஷேகம் செய்ய

    கடன் எனும் தொல்லை காணாதொழியும்

    நெல்லிக்கனியால் அபிஷேகம் செய்ய

    பித்தம் தெளியும் சித்தம் குளிரும்

    விபூதியாலே அபிஷேகம் செய்ய

    திரண்ட செல்வம் மனையினை சேரும்

    பஞ்சாமிருதத்தால் அபிஷேகம் செய்ய

    தொட்டது எல்லாம் ஜெயமாய் மாறும்

    கருப்பன் சாறால் அபிஷேகம் செய்ய

    உடலில் வலிமை அனுதினம் கூடும்

    மஞ்சள் தூளால் அபிஷேகம் செய்ய

    ராஜ வசியம் கைவசமாகும்

    மாதுளையாலே அபிஷேகம் செய்ய

    அரச பதவி வாசலை நாடும்

    சொர்ணாபிஜேகம் மோட்சம் கொடுக்கும்

    கங்கா ஜலமோ சாந்தியை கொடுக்கும்

    பழரசமெல்லாம் வறட்சியைத் தடுக்கும்

    பரம சிவனே உன்னருள் கிடைக்கும்

    தலைமுதல் கால்வரை தாண்டவக்கோனே

    தயவுடன் நீயே காத்திட வேண்டும்

    சிறியதும் பெரியதும் பிணியணுகாமால்

    சிவனே நீயே காத்திட வேண்டும்

    காத்து கருப்பு பில்லி சூனியம்

    எதுவும் எம்மை அண்டவிடாமல்

    காப்பது ஒன்றே உன் பொறுப்பாகும்

    கயிலை நாதா கடைக்கண் பாராய்

    இயற்கை சீற்றம் எதுவும் வேண்டாம்

    இன்னல் தொல்லை இனியும் வேண்டாம்

    இயக்கம் உந்தன் விழியசைவாலே

    வேதனையகல நீயருள்வாயே

    துன்பம் துயரம் நெருங்காதிருக்க

    தூயவன் சிவனே நீயே காப்பு

    அன்பர்கள் நாங்கள் உந்தனின் பிள்ளை

    அரவணப்பதுவே உந்தன் பொறுப்பு

    சூரியன் பணிந்த சுடரொளி சிவனே

    மன்மதன் வணங்கிய மங்கள சிவனே

    எமனும் போற்றிய எங்களின் சிவனே

    சந்திரன் தலையில் சூடிய சிவனே

    அக்னி வணங்கிய ஹரஹர சிவனே

    கங்கை தொழுத கயிலாய சிவனே

    காற்றும் கைதொழும் கருணை சிவனே

    உலகம் துதிக்கும் உன்னத சிவனே

    விண்ணவர் வியக்கும் விந்தை சிவனே

    விளையாட்டுடைய வேதாச்சலனே

    கண்ணிமையாக காக்கும் சிவனே

    கண்ணீர் துடைக்க வருவாய் சிவனே

    உடுக்கை ஒலியில் மயங்கும் சிவனே

    ருத்ராக்ஷ மாலை அணிந்த சிவனே

    படிக்கும் யாவும் பரமன் சிவனே

    பதமலர் நாடி வந்தோம் சிவனே

    வேடன் ஒருவன் மானினைத் துரத்தி

    உன் திருக்கோயில் ஒன்றினை அடைந்தான்

    ஆலயத்துள்ளே முனிவர் ஒருவர்

    மானுக்கு அபயம் அளித்திடக் கண்டான்

    கடும் சினத்தாலே வேடன் அந்த

    முனிவரைத் தாக்க வில்லினை எடுத்தான்

    ரிஜியினைக் காக்க சிவனே நீயும்

    புலிவடிவாக எதிரே தோன்றி

    அவனை விரட்டி நாடகம் செய்தாய்

    அங்கே இருந்த வில்வ மரத்தினில்

    வேடனும் ஏறி தஞ்சம் அடைந்தான்

    பசியுடன் உறக்கம் இல்லா அவனும்

    வில்வ இலையினை பறித்தே போட்டான்

    வில்வ இலைகள் உன்மேல் விழவும்

    வேடனுக்கருளை அளித்தாய் சிவனே

    அதுபோல் எமக்கும் அருள்வாய் சிவனே

  8. ஐந்தெழுத்தான ஹரஹரசிவனே

    அடியவர்க்கு தவ எதிர் வருபவனே

    உந்தனில் மேனியில் சந்தனக் காப்பு

    செய்திட வழங்கு அருள் எனும் தீர்ப்பு

    குங்கும் பூவும் கோரோசனையும்

    கஸ்தூரி பச்சை கற்பூரம் சேரத்து

    எங்களின் இறைவா உன் திருமேனியில்

    பூசித்த எமக்கு நீயருள்வாயே

    கோடி மலரால் அர்ச்சனை செய்ய

    ஞாலம் புகழும் ஞானம் வருமே

    ஐந்து கோடி மலரால் உன்னை

    அர்ச்சனை செய்ய முக்தி வருமே

    பத்து கோடி மலர்களை கொண்டு

    பித்தன் உன்னை பூஜிப்பதாலே

    ராஜயோகம் கைவரக் கூடும்

    தேசம் ஆளும் நேரம் வருமே

    வித விதமான அபிஷேகம் உனக்கு

    விருப்புடன் செய்ய விழிகளும் அகலும்

    நமசிவாயமெனும் நாமும் சொல்ல

    நல்வினை பெருகும் தீவினை மறையும்

    பலால் உனக்கு அபிஷேகம் செய்ய

    ஆயுள் கூடும் அகமும் மகிழும்

    தேனால் உனக்கு அபிஷேகம் செய்ய

    மகிழ்ச்சி நாளும் மனதினில் பூக்கும்

    சர்க்கரையாலே அபிஷேகம் செய்ய

    மனதில் நிம்மதி மலையெனக் கூடும்

    எலுமிச்சை ரசத்தால் அபிஷேகம் செய்ய

    அறிவின் விருத்தி அதிகம் ஆகும்

    இளநீராலே அபிஷேகம் செய்ய

    ஆனந்தமாக வாழ்ந்திடலாமே

    பன்னீரால் அபிஷேகம் செய்ய

    பக்தி பெருகும் சிக்கல் விலகும்

  9. எல்லா உயிரும் உந்தன் படைப்பு

    உலகின் இயக்கம் உந்தனின் சிறப்பு

    இல்லாதொழிப்பாய் இனியொரு பிறப்பு

    ஒவ்வொரு நொடியும் உந்தனின் நினைப்பு

    வெள்ளியம்பல வித்தகன் நீயே

    விதியினை மாற்றும் வல்லவன் நீயே

    சொல்லில் அடங்கா சொக்கனும் நீயே

    சுந்தர தமிழில் உனைப்பணிவோமே

    நற்றாள் வணங்கிட நல்லோர் வியந்திட

    பற்றாய் உனையே பறறிடுவோமே

    சற்றே கருணை புரிந்திடுவாயே

    தியான வடிவாய் தவம் புரிபவனே

    திருவடி பணிவோர்க் கருளும் சிவனே

    யோக நிலையில் புவியினை ஆளும்

    தியாகேஸ்வரனே நீயருள்வாயே

    மனமொரு முகமாய் மலரடி தன்னில்

    அனுதினம் லயித்து இரண்டற கலந்து

    சிவமயமாக ஒளியது தோன்றி

    அடியவர் நெஞ்சை ஆள்வது நீயே

    ஈசன் உனையே பேசுதல் வேண்டும்

    லிங்காபிஷேகம் கானுதல் வேண்டும்

    நேசம் மிகுந்து உருகுதல் வேண்டும்

    நிதமும் உந்தன் திருவருள் வேண்டும்

    சக்தி மூவரை பக்தியில் வணங்க

    ஒன்பது நாட்கள் அவனியில் வேண்டும்

    முக்தியை கொடுக்கும் நின்னருள் பெறவே

    ஒருநாள் போதும் பலன் உண்டாகும்

    சிவஓம் சிவஓம் எனும் உன் நாமம்

    செவிகளில் ஒலிக்க சிறப்புகள் கூடும்

    வருவோம் வருவோம் சன்னதி நாடி

    வைத்தீஸ்வரன் உனதருள் வேண்டி

  10. அணையே இல்லா அருட்கடல் நீயே

    அகிலம் காக்கும் ஆண்டவன் நீயே

    இணையே இல்லா ஈசனும் நீயே

    எளியோர்கருளும் எம்பெருமானே

    புழுவும் புல்லும் உன்படைப்பாகும்

    புலரும் பொழுதும் உன் பரிசாகும்

    எழுதும் கவியும் இசையும் உன்னை

    என்றும் போற்றி வழங்கிடும் தன்னை

    மொட்டும் மலரும் உன்பதம் நாடி

    முன்வினை நீங்கி மோட்சம் பெறுமே

    தொட்டவை யாவும் துலங்கிடத்தானே

    தூயவன் உன்னை வணங்கிடுவோமே

    ஆணவம் கன்மம் மாயை என்னும்

    மும்மலம் தன்னை அழிப்பவன் நீயே

    ஞான விலாசமாய் நல்லொளி வடிவாய்

    ஞானியர் அறிந்த சர்வேஸ்வரனே

    சிவராத்திரியெனும் சொல்லின் பொருளே

    மங்கள சுகத்தை தருவது ஆகும்

    தவம் பல இயற்றி பெறுகிற வரத்தை

    தருகிற நாளே இந்நாளாகும்

    மனமும் வாக்கும் காயம் மூன்றும்

    உனையே நினைத்திட தீவினை அகலும்

    தினமும் உந்தன் திருவடி வணங்க

    தொடரும் துயரம் நிழலென மறையும்

    உறக்கம் விடுத்து விரதம் இருந்து

    உலக நாயகன் உந்தனை பணிந்து

    சிறப்புடன் வாழ உன்னருள் வேண்டி

    செய்திடுவோமே பூஜைகள் கோடி

    பார்க்க பார்க்க உன்முகம் பார்க்க

    பூக்க பூக்க மலரெனப் பூக்க

    நல்லருள் வேண்டும் நீ தருவாயே

    நம்பிய பேருக்கு நலம்புரி நீயே

  11. காசியில் வாழும் கங்காதரனே

    கலியினைத் தீர்க்கும் காமேஸ்வரனே

    பூஜைகள் செய்து உன்னடி போற்றி

    பொல்லா வினையைப் போககிடுவோமே

    எண்ணம் முழுதும் இருப்பவன் நீயே

    எல்லா உயிரின் இயக்கம் நீயே

    கண்கள் மூன்றைக் கொண்டவன் நீயே

    கைதொழுவோரை காத்திடுவாயே (2)

    அணையே இல்லா அருட்கடல் நீயே

    அகிலம் காக்கும் ஆண்டவன் நீயே

    இணையே இல்லா ஈசனும் நீயே

    எளியோர்கருளும் எம்பெருமானே

    புழுவும் புல்லும் உன்படைப்பாகும்

    புலரும் பொழுதும் உன் பரிசாகும்

    எழுதும் கவியும் இசையும் உன்னை

    என்றும் போற்றி வழங்கிடும் தன்னை

    மொட்டும் மலரும் உன்பதம் நாடி

    முன்வினை நீங்கி மோட்சம் பெறுமே

    தொட்டவை யாவும் துலங்கிடத்தானே

    தூயவன் உன்னை வணங்கிடுவோமே

    ஆணவம் கன்மம் மாயை என்னும்

    மும்மலம் தன்னை அழிப்பவன் நீயே

    ஞான விலாசமாய் நல்லொளி வடிவாய்

    ஞானியர் அறிந்த சர்வேஸ்வரனே

    சிவராத்திரியெனும் சொல்லின் பொருளே

    மங்கள சுகத்தை தருவது ஆகும்

    தவம் பல இயற்றி பெறுகிற வரத்தை

    தருகிற நாளே இந்நாளாகும்

    எண்ணம் முழுதும் இருப்பவன் நீயே

    எல்லா உயிரின் இயக்கம் நீயே

    கண்கள் மூன்றைக் கொண்டவன் நீயே

    கைதொழுவோரை காத்திடுவாயே (2)

  12. நீராடி நெற்றியில் திருநீறணிந்து

    நீலகண்டேனே உந்தனைத் துதித்து

    எல்லாம் நீ எனும் சிந்தனைக் கொடுத்து

    எங்களை நீயே நல்வழி நடத்து

    அப்பரின் கவியில் அகம் மகிழ்ந்தவனே

    சுப்பரமணியனை வழங்கிய சிவனே

    கடுந்தவம் புரிந்திட வரம் தருபவனே

    கயிலாபுரியின் அதிபதி சிவனே

    விரிசடையோனே விந்தை ஸ்வரூபா

    உருகிட அழைத்தால் உடன் வருவோனே

    திருவிளையாடல் புரிபவன் நீயே

    தீமையை அழிக்கும் முதல்வனும் நீயே

    தகதகதகவென பொன்னொளி காட்டும்

    தாண்டவராயன் உந்தனின் தோற்றம்

    இகபர சுகங்கள் குறைவற வழங்கு

    எல்லா உயிர்களும் உனதென முழங்கு

    முகம் அது மலர முறுவலை காட்டு

    அகம் அது குளிர அருட்கரம் நீட்டு

    துயரது விலக விதியனை மாற்று

    அடியவர் காட்டும் அன்பினை ஏற்று

    அன்பினைக் காட்டும் அருட்பெரும் ஜோதி

    அம்பிகை உமையுடன் நீயொரு பாதி

    நல்லவர் வாழ அருளிடு நீதி

    நமசிவாயமே நலம் தரும் சேதி (2)

    உந்தனின் தோழன் லக்ஷ்மி குபேரன்

    திருவருள் தன்னை நாஙகளும் அடைய

    தந்திட வேண்டும் நல்லருள் நீயே

    சந்திரசேகரா எங்களின் சிவனே

    அடியவர் வாழ்வில் அமைதியைத் தந்து

    அவதிகள் நீங்கி விலகிடச் செய்து

    தடைகளை அகற்றி வழியினைக் காட்டு

    நலிவடைந்தோரின் நெஞ்சினைத் தேற்று

  13. பாடல் : பிரதோஷ சிவ கவசம் – பாடல்வரிகள்

    குரலிசை : சுதா

    கவியாக்கம் : செங்கதிர்வாணன்

    இசை : பிரதீப்

    தயாரிப்பு : அனுஷ் ஆடியோ

    ***********************************************************************************

    சக்தியின் துணைவா எங்களின் இறைவா

    பக்தருக்கருளும் பனிமலை நாதா

    வேதம் நான்கும் உன் புகழ் பேசும்

    ஆடல் அரசே அம்பலவாணா (2)

    மெய்யுடன் பிறந்த வாசனை போலே

    மெய்யடியாரின் மனம் உறைவானே

    ஹரஹர சிவனே அருணாசலனே

    அருள் புரிவதிலே பரிபூரணனே

    சந்திரன் தலையில் சூடிய வடிவே

    சங்கரனாக விளங்கிடும் உருவே

    வந்தவர்கெல்லாம் வரம் தரும் சிவனே

    வஞ்சனையில்லா நெஞ்சடையோனே

    சூலம் தரித்த சூத்திரதாரி

    பரிவுடன் பார்க்கும் பரோபகாரி

    காலம் தன்னை கைக்குள் வைத்து

    காரியம் நடத்தும் சர்வேஸ்வரனே

    கருணாமூர்த்தி வருக வருக

    கவலை தீர்க்கும் மருந்தே வருக

    அருணாசலனே வருக வருக

    அடியவர் மகிழ அருளே தருக (2)

    பரம சிவனே பரிவுடன் வருக

    பரம் பொருள்நீயே வருக வருக

    சிரமம் நீக்கும் சிவமே வருக

    சிந்தை முழுதும் நிறைந்திட வருக

    மருந்தீஸ்வரனே மகிழ்ந்தே வருக

    மாதொரு பாகன் வடிவே வருக

    குறுங்கலீஸ்வரன் விரைந்தே வருக

    குறைகளை விலக்க அருள்மழை பொழிக

    அலையும் மனதை அடக்கிட வருக

    அன்பே சிவமென அறிந்தேன் வருக

    நலம் தரும் எங்கள் நாயகன் வருக

    நமசிவாயமே நலமுடன் வருக

    ஏழுலகும் உன் புகழ்தனை பாடும்

    சூழும் இருளை உனதருள் நீக்கும்

    விண்ணவர் கைகள் உந்தனை வணங்கும்

    புண்ணியம் உனது திருவடி வழஙகும் (2)

Comments are closed.

© 2024 Lyrics MB - WordPress Theme by WPEnjoy