Velundu Vinai illai | வேல் உண்டு வினை இல்லை | Muruga songs with lyrics – 1



Follow us by clicking here

Neyveli Duo
presents

முருகன் பாடல்கள் – 1
Ragam: Sivaranjani
Thalam: Adhi

வேல் உண்டு வினை இல்லை
மயில் உண்டு பயம் இல்லை
குகன் உண்டு
குறைவில்லை மனமே !
கந்தன் உண்டு
கவலை இல்லை மனமே !
Vel undu Vinai illai
Mayil undu Bayam illai
Gugan undu kuraivillai maname !
Kandan undu
kavalai illai maname !

நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
நெருப்பு வடிவாகத் தோன்றி
நிருதர் குலத்தை
அழித்த நிர்மலன் – முருகன்

Neelakandan nettrik kannil
Neruppu vadivaagath thondri
Niruthar kulathai
azhitha Nirmalan – Murugan

நெற்றியிலே நீர் அணிந்து
நெறியாக உன்னை நினைந்து
பற்றினேன் உள்ளம் அதில்
உன்னடி – முருகா

Nettriyile neer aninthu
Neriyaaga unai ninainthu
Pattrinen ullam adhil
unnadi – Muruga

நெஞ்சம் அதில் வஞ்சம் இன்றி
நிர்மலனே நின் அடியைத்
தஞ்சம் என நெஞ்சம் அதில்
எண்ணினேன் – முருகா

Nenjam adhil vanjam indri
Nirmalane nin adiyai
Thanjam ena nenjam adhil
enninen – Murugaa

ஓயாது ஒழியாது
உன் நாமம் சொல்பவர்க்கு
உயர்கதி தான் தந்திடுவாய்
முருகா – வாழ்வில்

Oyaadhu ozhiyaadhu
Un naamam solbavarkku
Uyargathi than thandhiduvai
muruga – Vaazhvil

கருணையே வடிவமான
கந்தசாமி தெய்வமே உந்தன்
கழல் அடியைக் காட்டி என்னை
ஆளுவாய் – கந்தனே

Karunaiye vadivamaana
Kanthasamy dheivame undhan
Kazhal adiyaik kaatti enai
aaluvai – Kandhane

முத்தான முத்துக்குமரா
முருகையா வா வா !
சித்தாடும் செல்வக்குமரா
சிந்தை மகிழ வா !

Muthana muthukkumara
murugaiya va va !
Sithadum selvakkumara
sinthai magizha va !

நீ ஆடும் அழகைக் கண்டு
வேல் ஆடி வருகுதய்யா
வேல் ஆடும் அழகைக் கண்டு
மயில் ஆடி மகிழுதய்யா
மயில் ஆடும் அழகைக் கண்டு
மனம் ஆடி வருகுதய்யா
மனம் ஆடும் அழகைக் கண்டு
மக்கள் கூட்டம் பெருகுதய்யா
Nee aadum azhagaik kandu Vel aadi varuguthayya
Vel aadum azhagaik kandu mayil aadi magizhuthayya
Mayil aadum azhagai kandu manam aadi varuguthayya
Manam aadum azhagaik kandu makkal koottam peruguthayya

source

14 Comments

Comments are closed.

© 2025 Lyrics MB - WordPress Theme by WPEnjoy