Mila | Ratty Adhiththan | Official Music Video | Selojan | DDesign | Tamil Rap Song 2023



Presenting the Official #TamilRap Music Video for #RattyAdhiththan ’s upcoming single Mila

Video produced by Ratty Adhiththan
Rap & Lyrics by Ratty Adhiththan
Music by selojan – @selojan_s
DOP / Editing / Direction by Denojan (DDesign) – @ddesignofficial_
Outfits Sponsored by roc_your_style Switzerland

FOLLOW ME ON INSTAGRAM for more on #tamilindependentmusic

Selojan –
DDesign –

source

9 Comments

  1. Mila Lyrics

    ராத்திரி நேரம் உன்னை தேடி வருவேன், இந்த காதலை நானும் உனக்கு சொல்ல மறந்தேன், 2K காதல் அது FastFood போல 90ஸ் வாழ்கை நனையாத மேடை,

    Chorus
    சர்மிலா மிலா மிலா மிலா மிலா ஊர்மிலா,
    சர்மிலா மிலா மிலா மிலா சொல்லு காதலா,
    சர்மிலா மிலா மிலா மிலா மிலா ஊர்மிலா,
    சர்மிலா மிலா மிலா மிலா சொல்லு காதலா

    Verse 1
    அவள் பெயர் கேட்டா வயசு 16, வலை போட்டு விரிச்சா அந்த கதை நீ கேளு, இடுப்பில குலுங்குது ஒரு நகைக்கடை அவள் நடந்து வந்தா பச்சை இலை நரம்புகள் கொஞ்சம் சிவக்கும் நான் தொட்டு பார்த்தா, அவ அச்சு அடிச்ச நோட்டு புது அஞ்சு ரூபா காசு, நான் கட்டவிழ்த்த மாடு கலையாத மரத்து வேரு, உதட்டில உள்ள ஈரம் இன்னும் கூடும் முத்தம் தா, முள்ளம் தட்டில் மின்னல் வெட்டும் கன்னத்தில் அவள் கை வச்சா, தச்சன் மகள் தாட்சாயினி கனவு கன்னி, இருதயம் தான் உன்னைத் தேடுது இளையராணி, மேகம் போல வந்தாய் என்னை தூக்கி வருடி சென்றாய், நான் உறங்கும் பொழுது ராத்திரியில் கனவில் வந்து தின்றாய்.

    ராத்திரி நேரம் உன்னை தேடி வருவேன், இந்த காதலை நானும் உனக்கு சொல்ல மறந்தேன், 2K காதல் அது FastFood போல 90ஸ் வாழ்கை நனையாத மேடை, ஆயிரம் அன்பு சொல்லடி கண்மணி உன் மடி மேலே மெத்தை என் சகி ஆயிரம் அன்பு சொல்லடி கண்மணி உன் மடி மேலே மெத்தை என் சகி

    Chorus
    சர்மிலா மிலா மிலா மிலா மிலா ஊர்மிலா,
    சர்மிலா மிலா மிலா மிலா சொல்லு காதலா
    சர்மிலா மிலா மிலா மிலா மிலா ஊர்மிலா,
    சர்மிலா மிலா மிலா மிலா சொல்லு காதலா

    Verses 2

    முப்பாட்டன் சொத்து அவள் முந்தானைக்குள்ள இருக்கு, மூச்சுவிடும் போது விம்மி வெடிக்குதடா எனக்கு, கட்டு காவல் இல்லா காளையை போல நான் சுத்தி திரிஞ்ச ஒரு காலம், இந்த கண்ணி வெடிகுள்ள காலை வைத்த பிறகு மனநிலை மாறும், ஆண்டவன் எனக்கு வரம் கொடுத்தான் விலகியே காதலில் தடம் பதித்தாள் தலைவியே, தலையணை மந்திரமாழும் காதல் இரு கவிதை தேடும் ஊடல், நிறம் மனம் அனைத்தையும் கடந்தது இறை வடிவிலே எனக்கு அமைந்தது!

    ராத்திரி நேரம் உன்னை தேடி வருவேன், இந்த காதலை நானும் உனக்கு சொல்ல மறந்தேன், 2K காதல் அது FastFood போல 90ஸ் வாழ்கை நனையாத மேடை

    Chorus
    சர்மிலா மிலா மிலா மிலா மிலா ஊர்மிலா,
    சர்மிலா மிலா மிலா மிலா சொல்லு காதலா
    சர்மிலா மிலா மிலா மிலா மிலா ஊர்மிலா,
    சர்மிலா மிலா மிலா மிலா சொல்லு காதலா

    Rap

    மனம் எனும் மந்திர கூட்டுக்குள் மல்லிகை பூக்களை மாதவி நுழைத்தாள், மலை முட்டும் மாதவன் விரிந்த தோளிலே மைவிழி போர்ப்படை தொடுப்பாள், கோபுரத்து கலசம் கொங்கை ஆதித்தன் நான் மந்திரவாதி, கால் கொலுசு கதறும் வளையல் இன்பத்தினை வென்றவர் யார், விண்ணில் இருந்து ஒரு வெள்ளி விழுந்தது கன்னி மகளுக்கு காந்தம், இந்த மண்ணில் பிறந்தவர் பெண்ணின் வளைவுக்கு வாசல் படிக்கட்டை தாண்டும், வெட்கம் தரும் வார்த்தை சொல்லவா, வேதனைக்குள் விரும்பிச் செல்லவா, தட்பவெப்பம் மாறும் பருவம் வெந்தணலில் விறகு சேர்க்கவா, சதை எலும்புகள் சமைத்த உருவம் சாமி வந்து கலையாடும், அவள் நறுமலர் சூட்டி நடந்து சென்றால் இறந்த உடலும் பாடும்
    – இரத்தி ஆதித்தன்-

Comments are closed.

© 2025 Lyrics MB - WordPress Theme by WPEnjoy