PAADUVEN PARAMANAI | TAMIL CHRISTIAN SONG 2023 | SUNG BY SUPER SINGER PRIYANKA | Lyrics Video



PAADUVEN PARAMANAI TAMIL CHRISTIAN SONG SUNG BY SUPER SINGER PRIYANKA

Editing by: Anish Richard.J Professional Video Editor

Lyrics:

தேவாதி தேவனை
தேடி வாருங்கள்
நாம் கர்த்தாதி கர்த்தரை
காண வாருங்கள்

தூயாதி தூயரை
துதித்து பாடுங்கள்
நம் ராஜாதி ராஜனுக்கு
ராகம் மீட்டுங்கள்

அவர் பாவிகளை மன்னிக்க
பரிசுத்தராய் வந்தார்
நாம் பாவங்களை நீக்கி
இந்த மண்ணுலகைத் தந்தார்

அனுதினம் துதித்திட
அவர் வழி நடந்திட
ஆலோசனை தரும் கர்த்தர்
அவர் அல்லவா

மரணத்தை ஜெயிக்க
மனிதனாய் ஜெனித்த
பரமன் இயேசு புகழை
நானும் பாடி சொல்லவா

கொண்டாடுவோம்
அவரை ஆர்பரிப்போம்
அகம் மகிழ்வோம்
இயேசுவை துதி பாடுவோம்

நினைவெல்லாம் நிறைந்தவர்
நிழலாக வருபவர்
நித்தம் எண்ணி துதி பாடும்
தூயர் அவர்

வருகையை நினைத்தே
வரும்வரை நிலைப்பேன்
வாக்கு மாறா தேவன் அவர்களை
வாழ்த்தி பாடுவான்

source

1 Comment

Comments are closed.

© 2025 Lyrics MB - WordPress Theme by WPEnjoy