வண்ணம் கொண்ட வெண்ணிலவே – எஸ் பி பி | Vannam Konda Vennilave with Lyrics | SPB | Vijay Musical



Song : Vannam Konda Vennilave
Film : Sigaram
Singer : S P Balasubrahmanyam
Lyrics : Vairamuthu
Music : S P Balasubrahmanyam
Video : Kathirvan Krishnan
Production : Vijay Musicals
#spbhits#vannamkondavennilave#TamilFilmSongs

பாடல் : வண்ணம் கொண்ட வெண்ணிலவே
திரைப்படம் : சிகரம்
குரலிசை : எஸ் பி பாலசுப்ரமணியம்
கவியக்கம் : வைரமுத்து
இசை : எஸ் பி பாலசுப்ரமணியம்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

பாடல்வரிகள் | LYRICS :

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை
பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை
சுவாசிக்க ஆசை இல்லை
கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானம் இல்லை
நீளத்தை பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை
தள்ளி தள்ளி நீ இருந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை
நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்ச்சத்திர பூ பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி
கன்னி உன்னை பார்த்திருப்பேன்
கால் கடுக்க காத்திருப்பேன்
ஜீவன் வந்து சேரும்வரை
தேகம் போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்

source

32 Comments

  1. அருமையான பாடல் கவிதை வரிகள் வாழ்வின் இறுதி வரை கேட்டு கொண்டு இருக்கவேண்டும் ‌16.12.2022 திருச்சி ‌சிவா

  2. எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் ஒவ்வொரு வார்த்தையும் ரொம்ப பிடிக்கும் மிக அருமையான பாடல் வரிகள்

  3. 1000 முறைக்கு மேலாக கேட்ட ஒரே பாடல் அண்ணன் அவர்கள் அனுபவித்து பாடிய பாடல்

  4. இசை (சோகம்) + பாடல் வரி (பொருள்)+ குரல் வளம்( உயிர்) = சிகரம்.

  5. எஸ்பிபி அய்யா அவர்கள் இந்த விண்ணுலகத்தை விட்டு போனாலும் அவருடைய இனிமையான குரல் பாடல் குரல் வளம் இந்த மக்கள் மனதில் எப்போதும் இருக்கும்

Comments are closed.

© 2025 Lyrics MB - WordPress Theme by WPEnjoy