ரவிவர்மன் ஓவியமோ | Ravivarman Oviyamo with Lyrics in Tamil | Old SPB Film songs | Vijay Musicals



Song : Ravivarman Oviyamo – Tamil Lyrics
Film : Pudhu Vayal
Singers : S P Balasubrahmanyam, Swarnalatha
Lyrics : Pulamaipithan
Music : Aravind
Video : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
#spbsongs#tamilfilmsongs#viaymusicals

பாடல் : ரவிவர்மன் ஓவியமோ – தமிழ் பாடல்வரிகள்
திரைப்படம் : புது வயல்
குரலிசை : S P பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா
கவியாக்கம் : புலமைப்பித்தன்
இசை : அரவிந்த்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

பாடல்வரிகள் :

ரவிவர்மன் ஓவியமோ
நான் தினம் மோஹனமோ
தென்றல் காற்றோ மின்னல் கீற்றோ
உன் சதங்கையொலி கலகலவென
குலுங்க வரும் தேவதையோ
வானில் வரும் தாரகையோ

கபதசத தசரிகரி சரிகப கரிகப தசதப
தசரிக ரிசகரி ககரிரி சசததபப ரிரிசசததபபகக
தரிகிட தரிகிட தோம் தரிகிட தரிகிட தோம்
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
தலாங்கு தகதிமி தலாங்கு தகதிமி தரிகிட தோம்

தா தத்தி தாவென்று நீ தத்தி ஆடென்று
காத்துக்கு பாட்டொன்று யார் தந்தது
நீ வந்த நேரத்தில் வானத்தில் மேகத்தில்
தேன் சிந்தும் வான்வில்லை யார் வைத்தது
விழிகளில் கவிநயமோ விரல்களில் அபிநயமோ
இயற்கையின் அதிசயமோ இளமையின் ரகசியமோ
பாதங்கள் மண்மீது மேவாமலே
பார்க்கின்ற என்னுள்ளம் நோகாமலே
அழகே வருவாய் அருகே இளமயிலே புதுவயலே

கூ குக்கூ கூவென்று ஆனந்த பாட்டொன்று
பாடட்டும் பாடட்டும் கோகிலங்கள்
தேன் சொட்டும் பூவொன்று பூஞ்சிட்டு நானென்று
ஆடட்டும் ஆடட்டும் நாட்டியங்கள்
அடிமுதல் முடிவரையும் அமுதத்தின் நதி வழியும்
எவனடி உனை படைத்தான் இளமையை சிறை வடித்தான்
நீர் கொண்டு போகின்ற மேகங்களே
தேர் கொண்டு பூமிக்கு வாருங்களே
மயிலும் பரதம் பயிலும் கலைநிலவு வரும்பொழுது

source

5 Comments

Comments are closed.

© 2025 Lyrics MB - WordPress Theme by WPEnjoy