முத்துசாமி பேர | ஏர் முனை | Muthusamy Pera | Yer Munai | Tamil Lyrics | Vijay Musicals



Song : Muthusamy Pera – Tamil Lyrics
Film : Yer Munai
Singers : Gangai Amaran, S Janaki
Lyrics : Gangai Amaran
Music : L Vaidyanathan
Video : Kathiravan Krishnan
Production : Vijay Musicals

பாடல் : முத்துசாமி பேர – தமிழ் பாடல்வரிகள்
திரைப்படம் : ஏர் முனை
குரலிசை : கங்கை அமரன், S ஜானகி
கவியாக்கம் : கங்கை அமரன்
இசை : L வைத்தியநாதன்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

பாடல்வரிகள் :

தண்டபாணியாரை கொண்டடைந்த பேரை
கும்பிடுங்கள் நாளுமே
வந்தாடும் துன்பம் யாவும் தீருமே
முத்துசாமி . . . முத்துசாமி . . .
முத்துசாமி பேர சத்தம் போட்டு பாட
வெட்கமாக இருக்குது
எம் மனசு சொர்க்கலோகம் பறக்குது
என் மாமா மகன் என் புருஷன்
என் கண்ணாலயே நான் ரசிப்பேன்
சூடாக விருந்து வெப்பேன்
செல்லத்தாயி . . . செல்லத்தாயி . . .
செல்லத்தாயி பேர செல்லமாகப் பாட
வெல்லமாக இனிக்குது
என் மனசு வெள்ளம் போல குதிக்குது
என் அத்த மக முத்தானவ
இந்த மச்சான் கிட்ட பித்தானவ
என்னோட சொத்தானவ
பாயில படுத்ததும் தூக்கமே புடிக்கல
பால் பழம் எதுவுமே ருசிக்கல பசிக்கல
எனக்கும் ஏதோ உன்போல ஆச்சு
இருந்த மனசும் எங்கேயோ போச்சு
எதுவுமே புரியல
வாடக் காத்துல வாடுற மனசு
வாசம் வீசுற வாலிப வயசு
தானாகத் தெரியல
தாமரை பூமுகம் தாகத்த ஏத்துது
தனிமைய கெடுக்குது மனசுல இனிக்குது
நெஞ்சுக்குள்ளே ஏதோபோல் இருக்கு
நெலமைக்கெல்லாம் நீதானே பொறுப்பு
நெருங்கி வா குளிருது
பாத்து பாத்து ஏங்குது நெனப்பு
பரிசம் போட்டு கேட்குது அணப்பு
வா புள்ள தவிக்குது
முத்துசாமி . . . செல்லத்தாயி . . .
முத்துசாமி . . . என் செல்லத்தாயி . . .

source

© 2025 Lyrics MB - WordPress Theme by WPEnjoy