ஆறெங்கும் தானுறங்க | Aarengum Thaan uranga – Manasuketha Maharasa with Lyrics | Vijay Musicals



Song : Aarengum Thanuranga | Tamil Lyrics
Film : Manasuketha Maharasa
Cast & Crew : Ramarajan, Seetha
Singers : Mano, S Janaki
Lyrics : Kalidasan
Music : Deva
Video : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
Tamil Film Song
#soupsong#lovesong#oldfilmsongtamil#vijaymusicals

பாடல் : ஆறெங்கும் தானுறங்க | தமிழ் பாடல்வரிகள்
திரைப்படம் : மனசுக்கேத்த மகராசா
நட்சத்திரங்கள் : ராமராஜன், சீதா
குரலிசை : மனோ, S ஜானகி
கவியாக்கம் : காளிதாசன்
இசை : தேவா
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
தமிழ் திரையிசை பாடல்

பாடல்வரிகள் :

ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
சீரங்கம் தானுறங்க திருவானக்கா உறங்க

நானுறங்க வழியில்லையே ராசா
இங்கே நாதியத்து கெடக்குது ஒன் ரோசா

ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க

நானுறங்க வழியில்லையே மானே
இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே

சாடல் எழுதி வெச்ச சாந்து சொவத்திலெல்லாம்
ஆடி மழையடிச்சு அத்தனையும் கரைஞ்சிருச்சு

சாடல் எழுதி வெச்ச சாந்து சுவத்தில் எல்லாம்
ஆடி மழையடிச்சு அத்தனையும் கரைஞ்சிருச்சு

தாங்கலையே தாங்கலையே ஆச
வெச்ச இந்த மனம்

தாங்கலையே தாங்கலையே ஆசை
வெச்ச இந்த மனம்

வாழ வெச்சு பாக்கலயே
சேர்ந்திருந்த ஊரு சனம்

ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க

நான் உறங்க வழியில்லையே ராசா
இங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா

மாமன் அடிச்சானோ மல்லியப் பூ செண்டால
அத்தை அடிச்சாளோ அல்லிப் பூ செண்டால

யார் அடிச்சா சொல்லி அழு
நீர் அடிச்சா நீர் விலகும் ஆயி

காத்து மெல்ல தொட்டாலுமே கறுத்தே தான் போகுமுன்னு
போத்தி வெச்ச ரோசாப் பூவ போடுவேனா வெய்யிலில

காத்து மெல்ல தொட்டாலுமே கறுத்தே தான் போகுமுன்னு
போத்தி வெச்ச ரோசாப் பூவ போடுவேனா வெய்யிலில

சங்குக்குள்ள அடங்கிடுமா
கங்க நதி நீரு

சங்குக்குள்ள அடங்கிடுமா
கங்க நதி நீரு

சந்திரனும் களங்கமுன்னு
சொன்னது தான் நம்மூரு

ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க

நான் உறங்க வழியில்லையே மானே
இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே

ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க

நான் உறங்க வழியில்லையே ராசா
இங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா

source

30 Comments

  1. மனதுக்கு இதமான பாடல்
    எனக்கு மிகவும் பிடித்தபாடல

  2. ஹ ஹம் ஹம் க்ஷஹ ஹஜ் ஹம் ஏஜ் ஹம் நல்ல வ்ஹ க்ஷஹ க்ஷஹ. ஹம் க்ஷஹ ஸவ்க்ஷ ஹாலோவீன் க்ஷஹ க்ஷஹ ஹம் க்ஷஹ ஹம்மர்

  3. என் ஆழ்மனதில் ஆழமாக பதிந்த பாடல் பிரிவின் வலியை வலிமையாக வாழ்க்கையில் பதிவு செய்த பாடல்

Comments are closed.

© 2025 Lyrics MB - WordPress Theme by WPEnjoy