Ayigiri Nandini – Tamil Version | Mahishasura Marthini
Singers : Trivandrum Sisters
Lyrics : Ravirangaswamy
Music : Sivapuranam D V Ramani
Video : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
#aigirinandini#mahishasuramardini#VijayMusicals
அயிகிரி நந்தினி – தமிழில் | மகிஷாசுர மர்த்தினி
குரலிசை : திருவனந்தபுரம் சகோதரிகள்
கவியாக்கம் : ரவிரங்கஸ்வாமி
இசை : சிவபுராணம் D V ரமணி
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
பாடல்வரிகள் :
மகிழ்வித்து மகிழ்ந்திடும் மலையரசன் மகளே
விளையாட்டாய் உலகை நடத்துபவளே
விந்திய மலையில் வாழ்பவள்
ஸ்ரீ மகாவிஷ்ணுவுக்கு பெருமை சேர்ப்பவளே
வீரர்கள் வணங்கிடும் பகவதி
நீலகண்டர் பத்தினி உலகக் குடுபத்தவளே
ஜெய ஜெய ஹே மகிஷாசுரமர்த்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
வரமழை பொழிபவள் கொடியோரை அடக்குபவள்
கடிந்து திட்டினாலும் பொறுப்பவளே
மூவுலக உயிர்களின் பசியாற்றி பாவங்கள்
களைபவள் சங்கரனை மகிழ்வித்தவள்
தீயவரை கோபிப்பவள் தேரொளியில் மகிழ்பவள்
தெய்வீக சிந்துநதி அலைமகளே
போற்றி போற்றி மகிஷாசுரனை
அழித்த வீரமிகு மலைமகளே
அகில உலகத்தின் அன்னையே என் தாயே
கதம்ப வனம் விரும்பி வசிப்பவளே
பேறான பேறு பெற்ற இமயத்தின் உச்சியில்
ஸ்ரீசக்ரம் நடுவினில் வீற்றிருப்பவளே
வேடிக்கை கேளிக்கைகளில் மகிழும் தேனே
மதுகைடவ அசுரரை அழித்தவளே
சதகண்டம் ஆயுதம் முண்டனை வீழ்த்திட
கஜாசுரம் துதிக்கை துண்டித்தவளே
போலியை எதிர்க்கும் யானைகளின் கழுத்தை
துண்டித்து எறிந்திடும் திறமையளே
முண்டாசுரனின் சேனாதிபதியை
கண்டதுண்டமாக வெட்டி எறிந்தவளே
அதீத ஆற்றலால் எதிரிகளை பிணமாக்கி
அருவிபோல் பொழிந்து குவிப்பவளே
பகுத்து ஆராய வல்லவர் சிவனை
எதிரியிடம் தூதாக அனுப்பியவளே
கேடுகெட்ட சிந்தனை நோக்கங்கள்
தீயவழி நடந்திடும் அசுரரை அழிப்பவளே
அபயம் புகுந்த எதிரிகளின் மனைவியர்
வீரரை அடைக்கலம் காத்தவளே
மூன்று உலகிற்கும் தலைவி எதிரிகளின்
கழுத்தில் திரிசூலம் நாட்டியவளே
தும் தும் மென முழங்கிடும் துந்துபி
வாத்தியம் வெற்றிடம் கம்பீர குரலினளே
ஹூங்காரம் கேட்டே தூம்ரவிலோசனன்
முதலிய அசுரர்கள் ஓடோடினரே
போரினில் மாண்ட அசுரர்களின் ரத்தக்கடலில்
தோன்றிய சிவந்தகொடி போன்றவளே
பூதகனம் மகிழ்ந்திட சும்பநி சும்ப
அசுரரை அழித்திட்ட பெருமை உடையவளே
வில்லை வளைத்து விற்போர் செய்யும்போது
நடனமிடும் கைவளையல் அணிந்தவளே
ஒரு கையில் பொன்னம்பு மறு கை அம்பறா
தூணியென வேகமாக அம்பெய்தவளே
நால்வகை சேனையின் வெட்டப்பட்ட தலைகளில்
போர்க்கள சதுரங்கம் ஆடுபவளே
போற்றியென உலகினர் போற்றிடும்
பகைவர் வென்றிட வெற்றி வீர தேவதையே
சல் சல் என ஒலித்து சிவனை மோகத்தில்
ஆழ்த்தும் கொலுசுகள் அணிந்தவளே
இயல் இசை நாடகம் நாட்டியம்
நடனங்கள் கலைகளில் ஆர்வம் உடையவளே
நறுமணம் கமழ்ந்திடும் தேவலோக பாரிஜாத
மலர்போல் மணம் வீசி ஒளிர்பவளே
பாற்கடலில் தோன்றி இரவிலே ஒளிவீசி
குளுமை தரும் நிலவு முகத்தவளே
பார்த்தவர் மயங்கிட கிரங்கிட சுழன்றிட
சுழன்றிடும் விழிகளை சுழற்றுபவளே
மல்யுத்தம் மற்போரில் திறமைகள் காட்டிடும்
மாமல்லருடன் போரிட விரும்புபவளே
மல்லிகை முல்லை பிச்சி மலர்கள்
சூடிடும் பெண்களால் சூழ்ந்தவளே
இளந்தளிர் சிவப்பும் வெக்கிடும் அளவிற்கு
செக்கச் செவேரென சிவந்தவளே
ஓயாமல் மதநீர் பெறுக்கிடும் யானையின்
நடையை ஒத்த நடை உடையவளே
பாற்கடல் அரசனுக்கு பிறந்தவள் மூவுலகின்
அணியாய் விளங்கும் நிலவானவளே
பேரழகு பெண்களுக்கும் பேராசை மோகத்தை
தூண்டிடும் பேரழகு இளவரசியே
தாமரை இதழ்போல் மென்மையும் அழகுள்ள
பரந்த படர்ந்த நெற்றியளே
ஆயக்கலை அறுபத்தி நான்கிற்கும்
இருப்பிடம் பிறப்பிடமான கலைமகளே
ரீங்கார வண்டுகள் சூழ்ந்து மொய்க்கின்ற
வதுல மலர் தலையில் சூடியவளே
உன் கையில் புல்லாங்குழல் வெட்கப்பட
குயில் போல் கூகூவென கூவிடும் குரலினளே
மலைவாழ் மக்களும் ஆடிப்பாடி மகிழ்ந்திட
மலைகளில் வீற்றருளும் மலையரசியே
வேட்டுவப் பெண்களில் சிறந்து விளங்கிடும்
நற்குணங்கள் யாவும் பொருந்தியவளே
நிலவொளி மங்கிட மறைந்திட மின்னிடும்
பட்டாடை இடுப்பிலே அணிந்தவளே
திருவடிப் பணிகின்ற தேவாசுரக் கிடவொளி
நிலவொளி வீசும் உன் நகங்களிலே
யானையின் மத்தகம் போன்றதுன் பொன்மலை
மேருவிற்கு நிகரான மார்புள்ளவளே
உன்னால் வெல்லப்பட்ட கோடி சூரியரால்
தினம் தினம் துதிக்கப் படுபவளே
தேவரைக் காத்திட தேவாசுரப் போர்முடிக்க
முருகனை மகனாகப் பெற்றவளே
சூரதன் சமாதிபோல் உயரத் துடிப்பவரை
ஆர்வமுடன் முன்னேற்றும் அக்கறையளே
திருவடித் தாமரை வணங்குபவர் இதயத்
தாமரை வாழ்ந்திடும் ஸ்ரீ லக்ஷ்மியே
அடியவர் நெஞ்சில் நீ வாழ்வதால் அவர்களும்
திருமால் ஆகிவிட மாட்டார்களா
திருவடி பெரும்செல்வ சம்பத்துக் கிடைத்தால்
அதைவிட வேறெதுவும் விளைவேனோ
பக்தர்கள் உன்னை பொன் போன்ற
சிந்து நதி நீரால் நீராட்டுகின்றார்களே
பக்தர்கள் இந்த்ராணி மார்பு போல் மார்பகம்
உள்ளப் பெண்கள் தழுவும் சுகம் பெற மாட்டாரோ
அந்த சுகம் பெரிதல்ல உனைப்பாட என்நாவில்
நாமகளை எழுந்தருளச் செய்வாயம்மா
நிலவாக மலர்ந்துள்ள உன் முகம் கண்டாலே
மலராத முகங்களும் மலர்ந்திடுமே
அருள் நிலா உனை விட்டு தேவலோகப்
பெண்டிர்கள் ஏன் தான் வான்நிலா நாடுகிறாரோ
தேவலோகப் பெண்களின் செயலும் உன் விளையாட்டு
அறிவேன் சிவயெனப் பேர் பெற்றவளே
தாயே உமையே கருணைப் புரிந்தெனைக்
காலா காலமும் காத்திடுவாயே
ஒப்பற்ற எல்லையற்ற இணையற்ற அருள் வழங்கி
உலகத்தின் தாயாக விளங்குகிறாயே
எது சரியென்று நீ நினைப்பதை நிகழ்த்து
அது எனது ஏக்கங்கள் போக்கிடுமே
போற்றி போற்றி மகிஷாசுரனை
அழித்த வீரமிகு மலைமகளே
source
வடமொழி பாடலுக்கான நேர் தமிழ் பாடல்:1.பிரம்ம மேற்கு மலை வேரூ ல் பரமானந்தமே!.2.பரமானந்த நடு பாக வசி கிருஷ்ணாவே!.3.மாய அம ர்நாத அற்புதப்பனி அபிராமி லிங் காவே!.4.4தலமக்த ப.ஆ. அருள் பிர ம்மானந்தமே!.5.கிழக்கு மேற்கு இ டை விந்தியமலைஅடிவார தூய வீ ர பைரவ வியர்வையாலான நர்மதா வே!.6.பைரவியம்ச, அரி கீழ்நிலை பரசுராம சக்தி முண்ட ரத்தமாரியே!.7.அவரழி ஆயிரவீர்யார்ச்சுன வாரி சுகளின் வீரரத்த சோணாவே!.8.கா ல டிபகவதியின் ஓர் வலத் தலை க மலாவின் 8லட்சுமியரிலொரு தானி யத் திரு விமலாவே!.9.ஒரிசா புரி வ சி மாயநாதரினிடபாகப் பூஞ் சக்தி யே! 10.தீய எருமைத் தலையனை ரூபம் மாற்றிய சாமுண்டிக்குத் தர் மவெற்றியே!.11.கபர்த பூப் பகவா னின் விமலாவிற்குச் சத்திய வெற் றியே!.சைல சம்பூர்ணானந்த பைர வரின் சக்தி கமலாவிற்கு வாழ்வரா க்கலில் வெற்றியே!
வாழ்க தமிழ்…
ஒம் துா்கா தேவ்யை நமக,மகீஷாசுரமா்த்தினி தாயே போற்றி,போற்றி.ராகு கால பூஜையை ஏற்று கொள்பவளே போற்றி,போற்றி.சக்தியின் வடிவே துர்கையம்மாவே போற்றி,போற்றி.ஆதி பரா சக்தி தாயே போற்றி,லட்சூமி தாயே போற்றி,சரஸ்வதி தாயே போற்றி.முப்பெருந்தேவிகளின் ஒருங்கிணைந்த சக்தியே போற்றி,போற்றி.
super
ஒம் துர்கா தேவ்யை நமக,மகீஷாசுரமர்த்தினி தாயே போற்றி,போற்றி.ஐம்பத்தி ஒரு சக்தி பீடங்களில் ஒன்றாக போற்றி துதிக்கபடும் காஞ்சி காமாட்சி தாயின் திருவடிகளே போற்றி,போற்றி.ஒம் சக்தி,பரா சக்தி.முப்பெருந்தேவிகளின் ஒருங்கிணைந்த சக்தியே துரககையம்மாவே போற்றி,போற்றி.ஆதி பரா சக்தீ தாயே போற்றி,லட்சுமி தாயே போற்றி,சரஸ்வதி தாயே போற்றி.சீவ சிவ.
விளம்பர இடைவேளை தவிர்த்தால் நன்றாக இருக்கும்
வணக்கம் …தமிழில் மகிஷாசுரமர்த்தினி பாடல் தமிழில் விவரித்து சொல்லி பாடலாக தந்த உங்களுக்கு என் மனமாா்ந்த நன்றிகள் உங்களுக்கு
l mp
VbWHdss dfsfah a dfjeyr
DdhhsgsrsgesdddSsddsgd
Jjs
J
அருமை
மிக மிக அருமை மிக்க நன்றி!
Pless download
அகில உலகத்தின் அன்னையே என் தாயே
கதம்ப வனம் விரும்பி வசிப்பவளே
பேறான பேறு பெற்ற இமயத்தின் உச்சியில்
ஸ்ரீசக்ரம் நடுவினில் வீற்றிருப்பவளே
வேடிக்கை கேளிக்கைகளில் மகிழும் தேனே
மதுகைடவ அசுரரை அழித்தவளே
மகிழ்வித்து மகிழ்ந்திடும் மலையரசி தாயே போற்றி
தமிழ் பாடல் வரிகளும், மற்றும் வார்த்தைகளும் மிகமிக அருமை. இத்தமிழ் தொகுப்பு நல்லதொரு பொக்கிஷமே! இதுபோன்று, அன்னபூர்ணா அஷ்டகம், அஷ்டலெக்ஷ்மி அஷ்டகம் தமிழாக்கம் (தமிழ் பாடல் வரிகள்)பண்ணமுடியுமா? Please.
Dòng cơ duyên chuyển xoay con người bao lần
Luật thiên công trả vay công bằng nghiệp trần
Đời không hay bởi nên gieo phiền muôn phần
Tội gieo phải mang đắng cay vào thân.
Đường nhân sinh mấy ai êm thuyền xuôi dòng
Đời phong ba ngổn ngang trong lòng muôn điều
Đò công danh mỏng manh như làn sương chiều
Tình thâm đổi thay nghĩa nhân bạc đen.
ĐK
Đời người ta ngắn ngủi
Buộc ràng chi sân si
Đến thác vẫn mê không tường tri
Giọt lòng ta tuôn rơi
Gắng sức ca bao lời
Ước muốn hương duyên bay ngàn nơi.
ஸ்ரீ தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே போற்றி போற்றி போற்றி
ஸ்ரீ கனக துர்கையே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
Vijay musical team hats off, u have done great job, nice to hear Tamil lyrics, lakhs thanks மிக்க நன்றி.
Nandrii
ஓம் சக்தி ஓம்
மிக்க நன்றி நின் பனி தொடர வாழ்துக்கள்
தமிழ்மொழி பாதி மட்டும் இருக்கு மீதிச் சமஸ்கிருதம் தான் இருக்கு முழுமையான தமிழ் பாடல் தேவை இனிமையான தமிழ் பாடல்கள் இயற்ற முடியும் அந்த வல்லமை தமிழ் மொழிக்கு உண்டு
Very very thanks
Super and thanks sir, please continue your work giving the famous mantras in tamil meaning, mikka nandri
மிக்க நன்றி தமிழ் மொழி பெயர்ப்பிற்கு
very nice
4778527 mmmmmmmmm
Ft bu