சிலுவை சுமந்தோராய் (Siluvai Sumandhorai) Lyrics Video | Bro.D.Augustine Jebakumar



சிலுவை சுமந்தோராய் (Siluvai Sumandhorai) Lyrics Video | Bro.D.Augustine Jebakumar

Lyrics, Tune & Sung by : Bro. D. Augustine Jebakumar
Music : Alwyn. m
Keys : Alwyn, Kingsley Davis
Rhythem : Davidson Raja
Guitar : Keba Jeramiah
Chorus : Hema, Priya

Mixed & Mastered : Anish @ Step One Digitals
Video Arrangement : Rock Media

Lyrics:
சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்
சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்
நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம்
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார்
அல்லேலூயா (4)

சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம்
மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம்
அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்
அதை மகிமை என்றெண்ணிடுவேன்
அல்லேலூயா (4)

இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார்
அல்லேலூயா (4)

வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே
அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே
கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்
அதை நித்தமும் காத்துக்கொள்வேன்
அல்லேலூயா (4)

இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார்
அல்லேலூயா (4)

சீஷன் என்பவன் குருவைப் போலவே
தனக்காய் வாழாமல் தன்னைத் தருவானே
பரலோக சிந்தை கொண்டு உமக்காய்
பணிசெய்வேன் நான் அனுதினமும்
அல்லேலூயா (4)

இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார்
அல்லேலூயா (4)

விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன்
மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்
விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்
உண்மையுள்ளவன் என்றழைப்பீர்
அல்லேலூயா (4)

இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார்
அல்லேலூயா (4)

Media Website: www.gemsmedia.in
GEMS Website: www.gemsbihar.org
Shop: shop.gemsmedia.in
Media Mail Id: media@gemsbihar.org
GEMS Mail Id: gems@gemsbihar.org

Our New Channel
GEMS WEB TV

source

36 Comments

  1. ஜான் ஜெபராஜ் என்பவரின் பாடலுக்கு அரைகுறை ஆட்டம்போடும் இளைஞர்களே.. இந்த பாடலை கேளுங்கள்.. இதுதான் இயேசுகிறிஸ்துவை நேசிக்கும் உண்மையான பாடல்..!

  2. Praise the Lord Brother!!!
    Great lyrics, tune too so so nice to sing. After long time good song in Christian circle. Praise to be Lord Brother!!!! Let God use you more & more for all of us!

  3. என் உள்ளத்தை உருக்கிய பாடல் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரேம் ஆமென்.

  4. பாஸ்டர் நீங்க பாட்டு பாடினாலும் பிரசங்கித்தாலும் ரொம்ப பிரயோஜனமுள்ளதாய் இருக்கு. சூப்பர். கர்த்தருக்கே மகிமை.

  5. சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்
    சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்
    நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம்

    இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
    ஒரு போதும் கைவிடவேமாட்டார்
    அல்லேலூயா அல்லேலூயா

    சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம்
    மாற்றோர் சதி செய்து மதிப்பைக் கெடுக்கலாம்
    அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்
    அதை மகிமை என்றெண்ணிடுவேன்

    அல்லேலூயா அல்லேலூயா…
    இயேசு தாங்குவார்….

    வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே
    அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே
    கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்
    அதை நித்தமும் காத்துக்கொள்வேன்

    அல்லேலூயா அல்லேலூயா…
    இயேசு தாங்குவார்…

    சீஷன் என்பவன் குருவைப் போலவே
    தனக்காய் வாழாமல் தன்னையும் தருவானே
    பரலோக சிந்தை கொண்டு உமக்காய்
    பணி செய்வேன் நான் அனுதினமும்

    அல்லேலூயா அல்லேலூயா…
    இயேசு தாங்குவார்…

    விண்ணை விட்டு என் கண்ணை அகற்றிடேன்
    மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்
    விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்
    உண்மை உள்ளவன் என்றழைப்பீர்

    அல்லேலூயா அல்லேலூயா..
    இயேசு தாங்குவார்

  6. என்றோ கர்த்தர் தந்த வரிகள் இன்று பல ஆத்துமாக்களின் சூழ்நிலையில் பொருந்தி பெலப்படுத்துகிறதே!! என்னவொரு விந்தை.!!
    உடைக்கப்பட்டேன் தொடப்பட்டேன்
    உன்னதருக்கே மகிமை…

  7. இந்த நல்ல பாடலுக்கு நல்ல Tune ம் தேவையான அர்த்தத்தையும் கொடுத்த தேவனுக்கு தோத்திரம். ஆமேன்

  8. எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்.

    நன்றி அகஸ்டின் anna

Comments are closed.

© 2024 Lyrics MB - WordPress Theme by WPEnjoy